Feb 21, 2006

என்ன வேண்டும்?

ஏணி வேண்டும்
வானத்தை தொட்டு பார்க்க
சிறகு வேண்டும்
மேகத்தோடு மிதந்து பறக்க

வலிமை வேண்டும்
மலைகளோடு முட்டி மோத
எளிமை வேண்டும்
சிரித்துக் கொண்டே வாழ

துணிவு வேண்டும்
பாற்கடலை நீந்தி கடக்க
தெளிவு வேண்டும்
வாழ்க்கை பாதையில் நடக்க

முயற்சி வேண்டும்
புது திட்டங்கள் செயற்படுத்த
உறுதி வேண்டும்
தடைக்கற்களை தகர்த்தெறிய

தோல்வி வேண்டும்
வெற்றியின் சிறப்பு உணர
தன்னம்பிக்கை வேண்டும்
இவை அத்தனையும் நடைபெற

English translation

What do we need?

Need a ladder
to touch the sky
Need a feather
to float amidst the clouds

Need strength
to break the mountains
Need simplicity
to lead a happy life

Need courage
to swim across the vast ocean
Need clarity
to walk the paths of life

Need hardwork
to execute new plans
Need willpower
to tackle the obstacles

Need failure
to appreciate success
Need self-confidence
to achieve the above mentioned

Blog Archive

All contents copyrighted by Anuradha Sridharan, 2023. Don't copy without giving credits. Powered by Blogger.