Mar 6, 2010

அந்த நிமிடம்

காதல் சொன்ன அந்த நிமிடம்
கண்களில் ஆயிரம் கோடி வினாக்கள்
ஏற்று என்னை அணைப்பாயா
மறுத்து என்னை விடுவிப்பாயா

காதல் சொன்ன அந்த நிமிடம்
சில பல புவியியல் மாற்றங்கள்
அதிர்ச்சி விரிசல்கள் நம்
நட்பென்ற பூமியில் தெரிக்குமோ?

காதல் சொன்ன அந்த நிமிடம்
இருபது அடி மேலே பறக்கும் என்னை
உன் "இல்லை" என்ற வார்த்தை மதிற்சுவர்
மேலே இடித்து விழுவேனோ?

காதல் சொன்ன அந்த நிமிடம்
 என் வாழ்க்கையை பசுமையாக்க
நயாகரா மேகங்கள் மிதந்து
வந்து என்னை நனைக்குமோ?

காதல் சொன்ன அந்த நிமிடம்
 நம் இதயத்துடிப்பு ஒன்றாகி
என் கை கோர்த்து நடக்க
நீ சம்மதம் தெரிவிப்பாயோ?

0 comments:

Get the latest posts by email

Blog Archive

All contents copyrighted by Anuradha Sridharan, 2018. Powered by Blogger.