Nov 26, 2007

கனவுலகம் (Dream world)

கண்கள் சொருகி
பார்வை விலகி
சென்றேன் கனவுலகத்திற்கு
திரும்ப மனமில்லாமல்

விடுதலை வேண்டும்
கண் கருவளையத்திலிருந்து
வேக ஒட்டத்திலிருந்து
கால சக்கரத்தின் சுழல்களிலிருந்து

நிற்க வேண்டும்
ஒவ்வொரு நிமிடத்தை ரசிக்க
கால் தடத்தை பதிக்க
இசை வெள்ளத்தில் மிதக்க

நடை போட வேண்டும்
தென்றலின் திசை நோக்கி
இயற்கையின் அழகை நாடி
சிறு ஓடையின் தெளிவைத்தேடி

காற்றில் பறக்க
சிறகு தேவையா?
கடலில் கலக்க
கால்கள் தேவையா?

அளவில்லை
உளறல்களுக்கு
எல்லையில்லை
கனவுகளுக்கு

A rough translation in English

In a state of trance
with my vision blurring
I stepped into my dream world
with no desire to return

wishing for freedom from
dark circles around my eyes
speed of the race
rotation of the life wheel

wishing to stop for
relishing every minute
leaving a footprint
floating in music

wishing to walk towards
the direction of the breeze
the beauty of nature
the stillness of the stream

To fly in air
Do I need wings?
To walk in ocean
Do I need legs?

No limits
to ramble
No boundaries
to dream

PS: Inspiration can come at any time, any place.....in a macroeconomics class as well! :-)

Blog Archive

All contents copyrighted by Anuradha Sridharan, 2023. Don't copy without giving credits. Powered by Blogger.