Skip to main content

Posts

Showing posts with the label Tamil poems

எலி ஓட்டம் (Rat race)

எப்பொழுது தொடங்கியது இந்த முடிவில்லா ஓட்டம் கல்லூரிப் படிப்பில் சேர்ந்த பிறகா வேலைக்கு சேர்ந்த பிறகா சிறிது நேரம் அமர்ந்து யோசித்த வேளையில்  அந்த நொடிகள்  ஆர்ப்பரித்தன கண்களில்  முதல் மதிப்பெண் எடு என்ற அம்மாவின் அறிவுரை பனிரெண்டாம் வகுப்பில் நன்மதிப்பை பெரு  உன் வாழ்க்கை சிறந்து விளங்கும் என்றனர் பொறியியல் படிப்பை  தேர்ந்தெடு  உன் எதிர்காலம் பிரகாசமானதாகிவிடும் என்றனர் நல்ல வேலையில்  சேர்ந்து விடு உன் வாழ்க்கை கனிந்து விடும் என்றனர் மேலாளர் பதவியை அடைந்து விடு உன் பொருளாதாரம் சிறந்து விளங்கும் என்றனர் இருபதுகள் கடந்தன இவை அனைத்தும்  செய்து முடிக்க மறு பேச்சு பேசாமல் இளைப்பாற நேரம் இல்லாமல் சமூக எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்ய முப்பதுகளில் காலடி எடுத்து வைத்தேன் இன்னும் வேகமாய் ஒடு இன்னும் சிறப்பை தேடு என்ற அறைகூவல்கள் மடியில் என் குட்டி தேவதை என்னை மீட்க அவதரித்தாள் வேகத்தை குறைத்தேன் நிமிடங்களை சேகரிக்க தொடங்கினேன்  என்னை தேட த...

சிறு மகிழ்ச்சி

என் வயதில் பதினைந்து வருடங்கள் பின்னோக்கி சென்றது போல் ஒரு உணர்வு எண்ணம் புரியாத ஒரு குதூகலிப்பு முகத்தில் அகலாத ஒரு புன்சிரிப்பு இமைக்க மறந்தேன் கணினியில் உன் சிரிப்பை கண்ட தருணத்தில் இருந்து, தனிமையின் பெருமை அறிந்தேன் இதயத்தின் படபடப்பு உணர்ந்தேன் எங்கோ எட்டா உயரத்தில் நீ இருந்தாலும் அருகில் அமர்வாயா என்று ஒரு ஏக்கம் அந்த புன்முறுவல் தருவாயா என்று ஒரு ஆசை கண்களின் காந்தம் உன் மொழியின் அழகு தேர்ந்த பல்வரிசை ஈர்த்ததடா என்னை இதயத்துடிப்பு வேகத்தில் இடி முட்டியது விண்ணை புயல் போன்ற இந்த உணர்வுகள் ஒத்தி வைக்க முயல்கிறேன் என் பணிகளில் மனம் செலுத்த அல்லல் படுகிறேன் வேண்டாம் இனி உன் திரைப்படங்கள் வேண்டாம் இந்த இளம்பருவத்து இன்னல்கள் கடமைகளும் எதிர்பார்ப்புகளும் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சிறு மாற்றம், வியர்க்கும் கடும் வெயிலில் வரும் சில்லென்ற கோடை மழை தாகத்தில் தவிக்கும் பயணிக்கு தரும் ஒரு கோப்பை குடிநீர் இந்த சிறு மகிழ்ச்சிக்கு ப்ரேமம் கலந்த நன்றி, உன்னால் ஈர்க்கப்பட்ட ஆயிரம் "மலர்"களின் சார்பாக! :-) De...

உனக்கென்று சில மணித்துளிகள்

பயம் என்னும் திரையை விலக்கலாம் ஓடுதலின் வேகத்தை குறைக்கலாம் பூக்களின் வாசத்தை நுகர அணில்களின் செல்ல சிணுங்களை ரசிக்க தூரத்தில் ஒலிக்கும் கோவில் மணியை எண்ண மழைத்தூறலின் தாளத்தை கேட்க உன் மூச்சின் ஏற்ற இறக்கங்களை உணர   நேரத்தை கொஞ்சம் ஒத்திவைக்க கைபேசியின் கூவல்கள் காத்திருக்கட்டும் முகநூலின் தகவல் ரேகைகள் ஓடிக்கொண்டிருக்கட்டும் வாழ்க்கை ஓட்டம் ஆமையாக சில மணித்துளிகள் மாறட்டும் கண்கள் நோக்கி முழுமையாக உள்வாங்கும் உரையாடல்கள் வேண்டும் காதுகள் கவனமாக கேட்கும் பொறுமைகள் வேண்டும் எதுவும் உன்னை விட்டு போய்விடாது உனக்கென்று சில மணித்துளிகள் ஒதுக்கினால்

எதிரொளி

உருவ கண்ணாடியை விட்டு விட்டு  உன் உள்ள கண்ணாடியை உற்று  நோக்கு உலகக் கண்ணாடியில் உன் முகம்  தெளிவாகத்தெரிய உழைத்திடு  

குறிக்கோள்

வேண்டுதலுக்காக முடிந்து வைத்த சில்லறை இன்று கள்ளுக்கடையின் முருகன் படத்தின் மேல் மாலையாய்

அந்த நிமிடம்

காதல் சொன்ன அந்த நிமிடம் கண்களில் ஆயிரம் கோடி வினாக்கள் ஏற்று என்னை அணைப்பாயா மறுத்து என்னை விடுவிப்பாயா காதல் சொன்ன அந்த நிமிடம் சில பல புவியியல் மாற்றங்கள் அதிர்ச்சி விரிசல்கள் நம் நட்பென்ற பூமியில் தெரிக்குமோ? காதல் சொன்ன அந்த நிமிடம் இருபது அடி மேலே பறக்கும் என்னை உன் "இல்லை" என்ற வார்த்தை மதிற்சுவர் மேலே இடித்து விழுவேனோ? காதல் சொன்ன அந்த நிமிடம்  என் வாழ்க்கையை பசுமையாக்க நயாகரா மேகங்கள் மிதந்து வந்து என்னை நனைக்குமோ? காதல் சொன்ன அந்த நிமிடம்  நம் இதயத்துடிப்பு ஒன்றாகி என் கை கோர்த்து நடக்க நீ சம்மதம் தெரிவிப்பாயோ?

முதல் தேடல்

காத்திருக்கிறேன் அவன் வரவுக்காக கண்ணில் சிறு தேடல் அதை மறைக்க கையில் ஒரு புத்தகம் எதிர்பாரா நேரத்தில் உன் வரவு என் கண்ணில் சிறு மின்மினி எதையோ நினைத்து ஒரு புன்னகை என்னவென்று கேட்க துடிக்கும் என் மனம் அருகில் வந்து அமர் ந்தாய் இதயத்துடிப்பு அதிகரிக்க ஒரு சின்ன வார்த்தை "அலோ" எத்தனை அர்த்தங்கள் ஒளிந்திருக்கும் சிறு குறள் மெய்ச்சிலிர்த்தேன் அத்தருணத்தில் என் பேனா எழுத துடித்தது மொழி கண்ணில் மறைய உன் வடிவம் என்னில் கரைய

அலையும் நானும்

Rambled this piece during a quiet evening date with the sea and the waves at Marari Beach கரையை தொட்டுச் செல்லும் அலையே என்ன சேதி கொண்டு வந்தாய் எனக்கு என்னை ரசிக்கும் உனக்கு பரிசுகள் பல கொ ண்டு வந்தேன் தொலைதூரத்திலிருந்து உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை உன் புதிர் மொழியின் அர்த்தம் தேடும் வேளையில் எதிர்பாரா நேரத்தில் உன் கண்களின் பிரகாசத்தை உணர இதோ கொண்டு வந்தேன் ஆழ்கடல் சிற்பிகள் எத்தனை அழகு எத்தனை வடிவம் என் சமர்ப்பணம் இந்த அதிசய சிற்பிகளுக்கு வெள்ளை கூடை கொண்டு சேர்த்த பல வண்ண பூக்கள் தொட்டு எடுத்த என் கைகளும் நிறம் மாறிய அற்புதங்கள் ஆதவன் மறையும் வேளையில் மேகக்கூட்டம் ஆடும் நடனங்கள் அமைதியான இந்த தருணத்தை எடுத்து செல்ல முயலும் வார்த்தைகள் தென்றல் தீண்டிய என் கூந்தல் கவிதை எழுத துடிக்கிறதே அதை கட்டுப்படுத்தும் என் கைகளும் போராடி களைக்கிறதே காற்று திசை நோக்கிச் செல்ல கால்கள் இரண்டும் பறக்கிறதே மேகத்தின் உள்ளே நீந்திட என் மனமும் அலை பாய்கிறதே

ஏன் இந்த நிலைமை

என் குழப்பங்கள் என் ஏமாற்றங்கள் இன்று நான் தோன்றவா? மலையின் பின் ஒழியவா? உலகத்தை பார்த்து ஒரு சிறு புன்னகை ஆனால் அதை கவனிக்க யாருமில்லா சூழ் நிலை வாழ்க்கை ஓட்டம் ஓடும் மனிதர்கள் ஒரு நிமிடம் என்னை பார்க்காத சிறுவர்கள் குழவிக்கு சோறு ஊட்ட நான் இனிமேல் தேவையில்லை Animal Planet டும் Pogoவும் போதும் சிறு சிறு சோற்று உருண்டை கையில் வைத்து நிலாச்சோறு குடும்பத்துடன் ஒன்றாய் வெற்றுத்தரையில் அமர் ந்து அன்று என் முன் கதைகள் சொல்ல ஏராளம், இன்று தொலைக்காட்சி முன் கை விரலுக்கு வேலை தாராளம் A rough translation in English Why such a state? My confusions My disappointments Should I rise today? Should I hide behind the mountains? I look at the world and offer a slight smile, But no one to notice is my pathetic state Engaged in the race of life are the adults, No leisure time in the hands of the children To feed the newborn, I'm no longer needed There is Animal Planet and Pogo these days Small balls of rice placed in the centre of palms, the whole family united together and ate their dinner in front ...

தருணம்

இளநீர் இனிக்கிறது அதிசயமாய் மனம் கசந்திருக்கும் வேளையில் எதிர்ப்பார்க்காத தருணம் தரும் புத்துணர்ச்சி

ஏன் இந்த அவசரம்? (Why such a hurry?)

I hope all those rash drivers who only know to honk and cause chaos on the roads because of their impatient and arrogant attitude are reading this poem. பொறுமை இழந்த மனிதா எதற்காக இத்தனை அவசரம் இரவுநேர அமைதிப்பொழுதில் எதற்காக ஒலி எழுப்புகிறாய் நடந்து சோர்ந்த கால்கள் ஓய்வு கேட்கவில்லையா? வேலை செய்யாத கைகள் சுறுசுறுப்பாகி விட்டனவா? பகுத்தறிவு இழந்த மனம் கல்வியால் மாறிவிடாது எறும்புகள் கடைபிடிக்கும் குணம் எக்காரணத்தாலும் மறைந்து விடாது பொறுமை ஒருநெல்லிக்கனி அதன் விளைவுகள் ஒரு நிமிடத்தில் கறைவதில்லை ஒரு நொடி வேகத்தால் ஒரு வாழ்வை இருட்டி விடாதே! ஒரு அலை கோபத்தால் உன்னை நீ இழந்து விடாதே! A rough translation in English The one who has lost patience Why you are in such a hurry? Is there a reason to honk in this quiet, peaceful night? Doesn't your swollen feet demand you for some rest? or does your inactive hands want to be busy? Your mind with no common sense will not change with your education The discipline followed by ants will never change for any reason Patience is like a gooseberry I...

கனவுலகம் (Dream world)

கண்கள் சொருகி பார்வை விலகி சென்றேன் கனவுலகத்திற்கு திரும்ப மனமில்லாமல் விடுதலை வேண்டும் கண் கருவளையத்திலிருந்து வேக ஒட்டத்திலிருந்து கால சக்கரத்தின் சுழல்களிலிருந்து நிற்க வேண்டும் ஒவ்வொரு நிமிடத்தை ரசிக்க கால் தடத்தை பதிக்க இசை வெள்ளத்தில் மிதக்க நடை போட வேண்டும் தென்றலின் திசை நோக்கி இயற்கையின் அழகை நாடி சிறு ஓடையின் தெளிவைத்தேடி காற்றில் பறக்க சிறகு தேவையா? கடலில் கலக்க கால்கள் தேவையா? அளவில்லை உளறல்களுக்கு எல்லையில்லை கனவுகளுக்கு A rough translation in English In a state of trance with my vision blurring I stepped into my dream world with no desire to return wishing for freedom from dark circles around my eyes speed of the race rotation of the life wheel wishing to stop for relishing every minute leaving a footprint floating in music wishing to walk towards the direction of the breeze the beauty of nature the stillness of the stream To fly in air Do I need wings? To walk in ocean Do I need legs? No limits to ramble No boundaries to dream PS: Inspiration can come at any time, any pl...

ரோஜா நாள்

என் வீட்டு ரோஜா இன்று பூத்தது பூக்களின் ராணி இன்று மலர்ந்தது ஒரு மொட்டு அது இன்று முழுப்பூவிற்கு வழி விட்டது விநாயகரின் பாதம் சேர்ந்தது மலர்ந்து சிவந்த இதழ்கள் காலை நேர வெட்கமோ? புன்சிரிப்பில் கொள்ளை கொள்ளும் அழகோ? புது வாசம் வீசும் மணமோ? உன்னை படம் பிடித்தது என் கண்கள் உன்னை ஏந்தியது என் கரங்கள் கண்களும் மலர்ந்தன உன்னால் கன்னங்களும் சிவந்தன உன்னால் நீ இன்றைய நாளை முழுமையாக்கினாய் நன்றி கூறும் என் மனதை நிறைவாக்கினாய் A rough translation in English The day of rose A rose in my garden blossomed today The queen of flowers bloomed this day A bud gave way to a flower decorating the feet of Lord Ganesha the bloomed, reddish lips Is it the morning blush? Is it the breathtaking beauty? Is it the fresh fragrance? Your picture in my eyes Your presence in my hands My eyes bloomed as well My cheeks blushed as well You completed my just begun day You filled my grateful mind

மழையே......

மழையே சிறு துளி மழையே சில பல ரகசியங்கள் சொல்லவா என் காதலை பற்றி காதல் பிற ந்தது எவ்வாறு தெரியவில்லை எனக்கு காதல் வளர் ந்தது எவ்வாறு புரியவில்லை எனக்கு கேட்டேன் அவன் குரலை அமைதி தெரி ந்தது பார்த்தேன் அவன் கண்களை தெளிவு தெரி ந்தது இதயத்தை கொடுத்தேன் என் இதயம் அறியாமல் தனிமையில் தேடினேன் என் கண்கள் அறியாமல் தன்னந்தனியே சிரித்தேன் தூக்கத்தில் உளறினேன் தோழிகள் பார்த்தனர் ஏளனம் செய்தனர் தட்டு எடுத்தேன் உண்ண முடியவில்லை கண்கள் அயர்ந்தேன் உறங்க முடியவில்லை தெரிந்தும் தெரியாதது போல் நடித்தான் செல்ல பெயர் வைத்தேன் புரிந்தும் புரியாதது போல் சென்றான் கண்களில் காதலை காட்டினேன் மனம் விட்டு பேசினோம் ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து சிரித்தோம் ஒவ்வொரு நொடியும் தயக்கமில்லாமல் சொன்னான் அவன் காதலை மறுப்பில்லாமல் சொன்னேன் என் காதலை காதல் கவிதை எழுதி தீர்த்து விட்டார்கள் கவிஞர்கள் என்று நினைத்தேன் "போடி பைத்தியக்காரி, கவிதை எழுத எழுத கவிஞர் பிறப்பார்" என்று உணர்த்தினான் ஆம்! கவிஞியாக பிறந்தேன் முதல் முறையாய் கூறினேன் என் காதல் பரிமாணங்களை மழையே உனக்கு முதல் முறையாய் This poem has been lying in my...

முதல் மாற்றம்

எனக்குள் பிறந்தது காதல் இதயக்கதவின் சாவி துவாரத்தில் எட்டி பார்த்தேன் உன்னை ! கதவை தூள்தூளாக்கி என் மனதில் நுழைந்த கள்வனே ! நீ யாரோ என்று சிந்தித்து கொண்ட வேளையில் , ஒரு புன்சிரிப்பு என்னை அறியாமல் என் கண்கள் உன்னை நோக்கின இது நான் தானா? கேள்விக்கணைகள் என்னை துரத்தின மருபுறம் திரும்பினேன் உன்னை மறக்க நீ என்னுள் நிரம்பி விட்டதை மறந்து இதயப்பாறையில் பூத்து விட்டது சிறு காதல் பூ என் கண்களில் தெரிகின்றது முதல் மாற்றம். A rough translation in English First Change Love is born in me. I peek through the keyhole of the door of my heart, I see you. Breaking the door into pieces, you enter my heart as a thief. Wondering who you are, A slight smile without realizing it, My eyes look at you. Is it me? I'm chased by questions I turn towards the other side to forget you. Trying to forget that you have filled in me In the rocky heart blossomed a little flower of love In my eyes I see the first change.

கிளிஞ்சல் விடு தூது

ஆயிரம் ஆயிரம் உயிரினங்கள் கடலுக்குள் மனிதனுடன் பேச ஆவலாய்! தன் கூட்டத்தை விட்டு வெளியே வர இயலாமை, புது சூழ் நிலையை தட்ப வெட்பத்தை தாங்க சக்தி இல்லாமை. எனவே விடுகின்றன கிளிஞ்சல் விடு தூது. பல நிறம் பல வகை பல வடிவம் ஆயினும் ஒவ்வொன்றுக்கும் உள்ளது தனித்துவம். கடல் அலை கொண்டு வ ந்து சேர்த்தது என் காலடியில். சிலவற்றை எடுத்தேன் என் கைகளில் பலவற்றை பார்த்தேன் கால் சுவடுகளில் அழகின் உதாரணம் இவை எளிமையின் இலக்கணம் இவை பரந்து விரிந்த பாற்கடலின் துளிகள் இவை A rough translation in English Seashell message Thousands of creatures beneath the ocean waiting to talk to mankind! Unable to come out of their herd, Unable to withstand the pressures of new environment. Hence sending a message through seashells. Different colours Different types Different shapes But unique in it's own way. Waves brought them closer to me I took some in my hands, I saw many in the footprints. An example of beauty An icon of simplicity, They represent the vastness of the majestic ocean.

ஒரு மாலை பொழுது

கருமேக கூட்டம் சூழ்ந்திருக்க செடி கொடி எல்லாம் நின்றிருக்க வந்ததே தென்றல் காற்றும் வந்ததே ! தந்ததே புதுமண் வாசனையும் தந்ததே ! சில்லென்ற மழைத்துளி ஒன்று கையில் வ ந்ததே ! பளிர் என்ற மின்னல் ஒளியும் கண்ணில் தெரிந்ததே ! கதிரவனின் செங்கதிர்கள் மெல்ல மறைந்ததே ! வெண்ணிலவும் மேகத்திரையில் முகத்தை ஒளித்ததே ! இது ஒரு பகலின் முடிவா? இல்லை, இருள்படர் இரவின் தொடக்கமா? இல்லை, வானிலையில் புது மாற்றமா? இந்த நொடிப்பொழுதை கையில் அடக்கவா? இல்லை, வார்த்தைகளில் வடிவம் கொடுக்கவா? இல்லை, என் ராகத்தில் இசையை மீட்டவா?

தெளிவு தந்த நிமிடம்

இனிய மாலை பொழுது அழகிய அலங்கார திருவடிவம் மங்கலம் பொங்கும் மணிவிளக்கு தெய்வீக மணங்கமிழும் குங்குமம் நெஞ்சை குளிரச்செய்யும் தீர்த்தம் சிரித்து மலர்ந்திருக்கும் மல்லிகை அமைதியை உணரும் மனம் திருக்கோயிலை சுற்றும் கால்கள் அடி பணியச்செய்யும் பக்தி புதுத்தெம்போடு திரும்பி வ ந்தேன் நான்...

சுதந்திர நினைவுகள்

Scribbled this one on our Independence day evening.... இன்றைய தினம் சிறப்பு வாய்ந்த நன்னாள் நினைவுகள் பலபல கொடியேற்றும் தலைவர்கள் மிட்டை கொடுக்கும் ஆசிரியைகள் தேச பக்தி பாடல்கள் அரை நாள் விடுமுறை காந்தி தாத்தா வாங்கிய சுதந்திரத்தை இன்ற்று நினைவு கூர்கிறார்கள் நமிதாவும் சினேகாவும் முழு சுதந்திரம் அடை ந்து விட்டோம் நாம் 24 மணி நேரமும் தொல்லைக்காட்சி முன் தவமிருக்க வேண்டும் சுதந்திரம் யாவருக்கும் பசி பஞ்சத்திலிருந்து வேலை திண்டாட்டத்திலிருந்து கல்வி சுமையிலிருந்து வெடித்தெழும் ஜனத்தொகையிலிருந்து வெறுக்கும் தீண்டாமையிலிருந்து பிழி ந்தெடுக்கும் லஞ்சத்திலிருந்து வெளி நாட்டு மோகத்திலிருந்து நம் தேசத்தை காப்பாற்ற விழித்தெழு தோழா ! பொழுதுபோக்கை தள்ளிப்போடு உன் கடமையை தேடு முழுமூச்சுடன் பாடுபடு மூட நம்பிக்கைகளை சாடு நம் நாட்டின் புகழ் பாடு பிறகு சுதந்திரத்தை கொண்டாடு !

வருக வருக !

Wrote this poem while returning home from work last night and heavy rains lashing the city விரைந்து வருகிறாய் பூமித்தாய்க்கு முத்தமிட திரண்டு ஓடுகிறாய் வெள்ளாற்றில் கலக்க நீ தொடும் வேளையில் மண்ணிற்கு புது வாசனை எனக்குள் பொங்கும் மங்காத ரசனை மேகக்கூட்டங்கள் உன்னை வரவேற்கும் கதிர் வீசும் சூரியனும் வெட்கத்தில் மறையும் மின்னல் சிரிப்பில் நீ பிரகாசிப்பாய் இடி முழக்கத்தில் நீ எதிரொலிப்பாய் உன்னால் குளிரும் உயிர்கள் உள்ளம் உன்னால் விளையும் பயிர்கள் செல்வம் உன்னை கரம்பிடிக்க என் கண்கள் காத்திருக்க வந்தாய் நீ மழையே தந்தாய் புது இசையே A rough English translation Welcome ! You reach quickly to kiss mother nature You flow swiftly to reach the river The moment you touch The soil exudes a new smell Blossoming in me a never-ending admiration Clouds gather to welcome you The bright sun sets blushed A lightning smile for you to glow A thunder blast for you to echo You cool the soul of lives You create the wealth of crops My eyes wait to capture you Here you come, Oh rain Here you give, new music