Skip to main content

முதல் தேடல்

காத்திருக்கிறேன் அவன் வரவுக்காக
கண்ணில் சிறு தேடல்
அதை மறைக்க கையில் ஒரு புத்தகம்

எதிர்பாரா நேரத்தில் உன் வரவு
என் கண்ணில் சிறு மின்மினி
எதையோ நினைத்து ஒரு புன்னகை
என்னவென்று கேட்க துடிக்கும் என் மனம்

அருகில் வந்து அமர் ந்தாய்
இதயத்துடிப்பு அதிகரிக்க
ஒரு சின்ன வார்த்தை "அலோ"
எத்தனை அர்த்தங்கள்
ஒளிந்திருக்கும் சிறு குறள்

மெய்ச்சிலிர்த்தேன் அத்தருணத்தில்
என் பேனா எழுத துடித்தது
மொழி கண்ணில் மறைய
உன் வடிவம் என்னில் கரைய