பயம் என்னும் திரையை விலக்கலாம் ஓடுதலின் வேகத்தை குறைக்கலாம் பூக்களின் வாசத்தை நுகர அணில்களின் செல்ல சிணுங்களை ரசிக்க தூரத்தில் ஒலிக்கும் கோவில் மணியை எண்ண மழைத்தூறலின் தாளத்தை கேட்க உன் மூச்சின் ஏற்ற இறக்கங்களை உணர நேரத்தை கொஞ்சம் ஒத்திவைக்க கைபேசியின் கூவல்கள் காத்திருக்கட்டும் முகநூலின் தகவல் ரேகைகள் ஓடிக்கொண்டிருக்கட்டும் வாழ்க்கை ஓட்டம் ஆமையாக சில மணித்துளிகள் மாறட்டும் கண்கள் நோக்கி முழுமையாக உள்வாங்கும் உரையாடல்கள் வேண்டும் காதுகள் கவனமாக கேட்கும் பொறுமைகள் வேண்டும் எதுவும் உன்னை விட்டு போய்விடாது உனக்கென்று சில மணித்துளிகள் ஒதுக்கினால்
Simplifying health, wellness and psychology through Indian Knowledge Systems