காதல் சொன்ன அந்த நிமிடம் கண்களில் ஆயிரம் கோடி வினாக்கள் ஏற்று என்னை அணைப்பாயா மறுத்து என்னை விடுவிப்பாயா காதல் சொன்ன அந்த நிமிடம் சில பல புவியியல் மாற்றங்கள் அதிர்ச்சி விரிசல்கள் நம் நட்பென்ற பூமியில் தெரிக்குமோ? காதல் சொன்ன அந்த நிமிடம் இருபது அடி மேலே பறக்கும் என்னை உன் "இல்லை" என்ற வார்த்தை மதிற்சுவர் மேலே இடித்து விழுவேனோ? காதல் சொன்ன அந்த நிமிடம் என் வாழ்க்கையை பசுமையாக்க நயாகரா மேகங்கள் மிதந்து வந்து என்னை நனைக்குமோ? காதல் சொன்ன அந்த நிமிடம் நம் இதயத்துடிப்பு ஒன்றாகி என் கை கோர்த்து நடக்க நீ சம்மதம் தெரிவிப்பாயோ?
Simplifying health, wellness and psychology through Indian Knowledge Systems