Scribbled this one on our Independence day evening....
இன்றைய தினம்
சிறப்பு வாய்ந்த நன்னாள்
நினைவுகள் பலபல
கொடியேற்றும் தலைவர்கள்
மிட்டை கொடுக்கும் ஆசிரியைகள்
தேச பக்தி பாடல்கள்
அரை நாள் விடுமுறை
காந்தி தாத்தா வாங்கிய
சுதந்திரத்தை இன்ற்று
நினைவு கூர்கிறார்கள்
நமிதாவும் சினேகாவும்
முழு சுதந்திரம் அடை ந்து
விட்டோம் நாம்
24 மணி நேரமும்
தொல்லைக்காட்சி முன் தவமிருக்க
வேண்டும் சுதந்திரம்
யாவருக்கும்
பசி பஞ்சத்திலிருந்து
வேலை திண்டாட்டத்திலிருந்து
கல்வி சுமையிலிருந்து
வெடித்தெழும் ஜனத்தொகையிலிருந்து
வெறுக்கும் தீண்டாமையிலிருந்து
பிழி ந்தெடுக்கும் லஞ்சத்திலிருந்து
வெளி நாட்டு மோகத்திலிருந்து
நம் தேசத்தை காப்பாற்ற
விழித்தெழு தோழா !
பொழுதுபோக்கை தள்ளிப்போடு
உன் கடமையை தேடு
முழுமூச்சுடன் பாடுபடு
மூட நம்பிக்கைகளை சாடு
நம் நாட்டின் புகழ் பாடு
பிறகு சுதந்திரத்தை கொண்டாடு !
Sep 3, 2006
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
All contents copyrighted by Anuradha Sridharan, 2020. Don't copy without giving credits. Powered by Blogger.

1 comments:
That was a good one :) Way to go...
Post a Comment