Jan 30, 2006

உன்னால் நான்

உந்தன் பெயர்
என்னுள் தீபம்
ஏற்றுகிறது

உந்தன் பார்வை
என்னுள் விண்கலமாய்
சீறி பாய்கிறது

உந்தன் வார்த்தை
என்னுள் கீதமாய்
எதிரொலிக்கிறது

உந்தன் ச்பரிசம்
என்னுள் தீப்பொறியாய்
தெரிக்கிறது

உந்தன் அன்பு
என்னுள் காதலை
வாழ வைக்கிறது

உந்தன் கோபம்
என்னுள் மன்னிப்பு
கேட்கிறது

உந்தன் சிரிப்பு
என்னுள் கற்கண்டாய்
இனிக்கிறது

உந்தன் காதல்
என்னுள் வாழ்வை
சுவையாக்கிறது

A rough translation in English :-
Your name lights the lamp in me
Your sight travels like a spacecraft in me
Your words echo like a melody
Your touch sparkles like a tiny spark
Your affection makes my love live
Your anger apologizes in me
Your smile is my sweetening agent
Your love makes my life interesting

1 comments:

DD said...

Beautiful!!

Get the latest posts by email

Blog Archive

Powered by Blogger.