பச்சை பசேல் புல்வெளி
நான் மட்டும் தனியாக
இனிய இசை என் செவிகளில்
மிதமான தாளம் என் கால்களில்
வானம் எனக்கு குடையாக
பூமி தாய் மடியாக
தனிமை எனக்கு துணையாக
வாழ்வேன் நான் நானாக
கவலைகள் மறந்து
தவறுகள் துறந்து
மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாய்
வாழ்வேன் நான் நானாக
பட்டாம்பூச்சிகள் வட்டமடிக்கட்டும்
குயில்கள் கானம் படிக்கட்டும்
ரோஜா முகம் மலரட்டும்
நீரோடை வழி திறக்கட்டும்
நீல நிற குறிஞ்சி பூக்கள் கம்பளம் விரிக்க
மூங்கில் மரங்கள் புல்லாங்குழலாய் மாற
இசைத்துக்கொண்டே
வாழ்வேன் நான் நானாக........
Nov 21, 2005
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
All contents copyrighted by Anuradha Sridharan, 2020. Don't copy without giving credits. Powered by Blogger.

0 comments:
Post a Comment