வானக்கூடையில்
ஒரு கோடி பூசிதறல்கள்
ஒரே ஒரு மலர்ந்த முகம்
ஏ நிலவே !!!
யாரை தேடி தேய்கிறாய்
தேய்ந்து தேய்ந்து மிளிர்கிறாய்
உன் அழகு
ஆண்களை வசீகரிக்கிறது
பெண்களை தலை குனிய வைக்கிறது
உன்னை வர்ணிக்காதவர்
பூவுலகில் இல்லை
உன்னால் மயங்காதவர்
எவ்வுலகிலும் இல்லை
அழகின் சிகரம் நீ
காதலின் தூது நீ
விடா முயற்சியின் மூலாதாரம் நீ
இன்ப குளிர்ச்சியின் ஜீவாதாரம் நீ
உன் வரவு இல்லையெனில் உலகம் இருண்டு கிடக்கும்
உயிர்கள் அமைதி இழக்கும்
இத்தனை வலிமை உன்னிடம்
ஆனால் ஏன் சிறு கலக்கம்
யாரும் முழுமை இல்லையென
உணர்த்த வந்த புதியவளே
அடக்கத்தோடு இருப்பவளே
ஏ நிலவே !!!
ஒரு கோடி பூசிதறல்கள்
ஒரே ஒரு மலர்ந்த முகம்
ஏ நிலவே !!!
யாரை தேடி தேய்கிறாய்
தேய்ந்து தேய்ந்து மிளிர்கிறாய்
உன் அழகு
ஆண்களை வசீகரிக்கிறது
பெண்களை தலை குனிய வைக்கிறது
உன்னை வர்ணிக்காதவர்
பூவுலகில் இல்லை
உன்னால் மயங்காதவர்
எவ்வுலகிலும் இல்லை
அழகின் சிகரம் நீ
காதலின் தூது நீ
விடா முயற்சியின் மூலாதாரம் நீ
இன்ப குளிர்ச்சியின் ஜீவாதாரம் நீ
உன் வரவு இல்லையெனில் உலகம் இருண்டு கிடக்கும்
உயிர்கள் அமைதி இழக்கும்
இத்தனை வலிமை உன்னிடம்
ஆனால் ஏன் சிறு கலக்கம்
யாரும் முழுமை இல்லையென
உணர்த்த வந்த புதியவளே
அடக்கத்தோடு இருப்பவளே
ஏ நிலவே !!!