அம்மாவின் நீங்காத அரவணைப்பு
தங்கை பாப்பாவின் புன்சிரிப்பு
நெய் சாதத்தோடு பருப்பு
கொடுப்பது பாட்டியின் பொறுப்பு
தாத்தா கடை இனிப்பு
தம்பியின் கண்களில் பூரிப்பு
நண்பர்களின் விளையாட்டு அழைப்பு
ஓடினான் போடாமல் செருப்பு
யாரும் காட்டவில்லை வெறுப்பு
எதற்கும் இல்லையே மறுப்பு
வளர்ந்தான் மனதில் சினப்பு
மேஜையில் புத்தகங்கள் குவிப்பு
கண்டான் உலகின் செழிப்பு
சொந்த அலுவலகத்தின் திறப்பு
அழகியின் முகம் சிவப்பு
அவளில்லாமல் அவனுள்ளம் தவிப்பு
சென்ற பாதையில் குடிப்பு
வாழ்க்கை ஆனதே இழப்பு
தாயின் மடியில் பிறப்பு
எமனின் கைகளில் இறப்பு
நடுவில் வாழ்வதே சிறப்பு....
Nov 24, 2005
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
All contents copyrighted by Anuradha Sridharan, 2020. Don't copy without giving credits. Powered by Blogger.

2 comments:
adi dhool kellupura...
Nice one :) Dint quite understand two words... kudippu and sinappu. Too pure a tamil for me, I guess!
Post a Comment